14

163 ஆவணத்தணிதிகழலங்கனாற்றுபூங்

காவணங்கற்பகக்காவினீழல் செய்

தீவணமிலங்குசெஞ்சடிலசேகரன்

பூவணத்தணிசிலபுகலுவாமரோ

வேறு

164 நீடுதிரைக்கடலாடைநிலவேந்தர் நேரிழையார் நெருங்க வெங்குஞ்

சூடகக்கைச்சுரர்மடவார்துணைவரொடும் விமானத்திற்றுவன்றுமூதூ

ரேடலர்தாரிட்டருச்சித்திந்திரன் வந்தனைபுரியுமெழில்கொண்மூதூர்

மாடமலிமறுகுதிகழ்வளமைசாறமிழ்ச் சங்கம் வளருமூதூர்

165 தேவர்களுந்திசை முகனுந் திருமாலுந்திசை யோருஞ் செங்கை கூப்ப

மேவுதிருநடராசர் மீனவன் றன் விழிகளிப்பவெள்ளிமன்றுட்

டாவின்மலாப்பதமாறித்தாண்டவஞ் செய்தருள்கின்றதருமமூதூர்

மூவுலகும் புகழ்மதுரைமிகவிளங்குநிலமகடன் முகமே போல

166 அன்னதிருப்பதிக்கங்கிதிக்கினில் யோசனைக்கப்பாலமர்ந்து தோன்றுஞ்

சின்மயமாஞ் சிவலிங்கஞ் செங்கதிர் வெய்யோன் பூசை செய்யவைகு

மன்னுநவமணித்தேரூர் மறுகு தொறுமாளிகை சூளிகைநெருங்கும்

பொன்மதில்சூழாலயஞ்சேர் பூவணத்தின் வளம் யாவர் புகலற்பாலார்

வேறு

167 அரியயன்முநிவரயின்முகக் குலிசத்தமரர் கோனளகையம்பதியான்

பரவருமிருள்கால்சீத்திடத்தோன்றும்பல்கதிர்ப்பரிதிவானவன்சேர்

தருணநல்லமுதகிரணசந்திரனற்றானவரானவரானோர்

திருமகடினமுமருவிடத்திகழுந் தென்றிருப்பூவணநகரம்

168 மேவியசடிலம் வெண்ணிலாவெறிப்பவிடையுகந்தேறிடும்விமல

னாவலர்புகழ்நான்மாடநீள்கூடனாயகனந்திடுயெம்பெருமான்

பூவுலகேத்தும் பொன்னனையாடன்பொருவருமனைவருகமலச்

சேவடிமணமெண்டிசாமுகம்வீசுந்தென்றிருப்பூவணநகரம்

169 பகவலன்பூசைபடைத்திடுபலனோ பண்ணவர்பண்ர்நற்றவமோ

இகம்பரம்வீடுமும்மையுமுயிர்கட்கினிதருளெம்பிரானருளோ

மிகும்புகழ்சாலுமிவற்றுள் யாதென்று விரித்திடற்கரியதாய் விளங்குஞ்

சிகரகோபுரங்கடிகழ்ந்து சேணோங்குந் தென்றிருப்பூவணநகரம்

வேறு

170 தொலைமாபுகழ்துன்றுஞ்சுராதியர்க்

கெல்லையில்லநலின்பமளித்திடு

மல்லலோங்கிவளர்ந்திடுமந்திரஞ்

செல்வமல்கிய தென்றிருப்பூவணம்

171 குன்றமன்னநற்கொங்கைசுமந்துநேர்

மின்றயங்கிடைமின்னனையாளுடன்

கன்றுமான்கரமேந்திய கண்ர்த

றென்றமிழ் பயிலுந்திருப்பூவணம்

172 அங்கண்வானத்தகடுகிழிபட

மங்குறோய்மணிமாடத்துங்கூடத்தும்

பொங்கரோங்கும் பொழில்களிடத்தும்வெண்

டிங்கண்மேவுறுந் தென்றிருப்பூவணம்

173 பொற்பதந்தனைப்பூசுரர்க்கீதலாற்

சொற்பதங்கடந்தோங்கியசூழ்ச்சியாற்

கற்பகத்தைவளர்த்திடுகாட்சியாற்

சிற்பரன்னிகருந்திருப்பூவணம்

174 எந்தையின்னருண்மேனிகொண்டெய்தலாற்

புந்திகொண்டதளித்திடும் பொற்பினாற்

கந்தமேவுங்கடாம்பொழியுங்கவுட்

சிந்துரந்நிகருந்திருப்பூவணம்

175 ஏய்ந்தவங்கணனங்கணியைதலால்

வாய்ந்தபொய்கையிடத்தில் வளர்தலாற்

போந்தவாறுமுகந்தருபொற்பினாற்

சேந்தன்போன்றது தென்றிருப்பூவணம்

176 பொங்குமாமலர்ப்பூங்கொடிமேவலாற்

சங்கமோங்கத்தடக்கை தரித்தலா

லெங்கணாதனிடத்திலிருத்தலாற்

செங்கண்மானிகருந்திருப்பூவணம்

177 இசையநான்மறையின்னிசை பாடலாற்

கசடறுங்கலைமங்கைகலத்தலா

னசையுடனன்னதானநர்கலாற்

றிசைமுகன்னிகருந்திருப்பூவணம்

178 புந்திகொள்ளும் பொற்பூவிற்பொருந்தலா

லந்தமற்றசெல்வங்களளித்தலால்

வந்தெஞ்ஞான்றுநன்மாலுடன் மேவலாற்

செந்திருந்நிகருந்திருப்பூவணம்

179 நல்லெழில்வளர்நான்முகனண்ணலா

லெல்லையில்கலையாவுமியம்பலா

லல்லிசேர் தவளாம்புயபீடிகைச்

செல்விபோன்றது தென்றிருப்பூவணம்

வேறு

180 ஆரணநான்கு மங்கமோராறுமளவிடற்கரியபேரொளியாய்

நாரணனவனுநாற்றிசைமுகனுங்கனவினுநண்ர்தற்கொண்ணாக்

காரணமாயக்காரணவுருவாங்கண்ர்தலன்றுகொண்டருளும்

பூரணஞானச்சுடர்ப்பிழம்பெனவேபொன்மதின் மன்னியதன்றே

181 எண்டருசரியையாதியோர் பயின்றங்கிருத்தலாலிறைபதம்போலும்

பண்டருவேதம்பாடிடுபரிவாற்பன்னுநான்மறையையும்போலுந்

தெண்டிரைக்கடற்பாற்றிசைகளோடுதலாற்றிசைமுகன்றன்னையுஞ் சிவர்ங்

கொண்டிடுமண்டகோளகைக்கப்பாற்குலவுபொற்கோபுரவாயில்

182 பல்லுயிரெல்லாம் பரிவுறவோங்கப் படைத்தலாற்பங்கயனொக்குஞ்

செல்வமோங்கிடவேதினந்தொறும் வளர்க்குந் திறத்தினாற் செங்கண்மாலொக்குந்

தொல்பவமனைத்துந்துடைத்தலான் மறைக்குஞ்சூழ்ச்சியா லருள்புரிதொடர்பாற்

சொல்லரும்புகழ்சேருருத்திரன் மகேசன் றொழிலறுசதாசிவனொக்கும்

183 வேலொடுசெறிந்தமிகுபொறிமயிற்கண் விரவலால்வேலனையொக்குங்

கோலமேவியநற்சூல மேல்கொண்டுகுலாவலாற் கொற்றவையொக்குங்

சாலவும் படைகடாங்கலான்மிக்கசமர் பொருநிருதரையொக்கு

மேலுநன்னிதியமீட்டலான்மன்னுமிருநிதிக்கிழவனை யொக்கும்

184 விரவுவானிமிர்ந்துமிக்கபொன்முடிகண்மேவலான்மேருவையொக்கும்

பரவமேற்கண்கள்படைத்தலாலணிசேர்பாகசாதனன்றனையொக்கும்

பொருவிகந்தோங்கிப்பூந்தனம்பொருந்துபொற்பினாற் பூமகளொக்கும்

கருதியேகாண்டற்கருமையான்ஞானக்கண்ர்தலண்ணலையொக்கும்

185 நாடுறயார்க்குநனிசிறந்தோங்கு நற்பெறியுடுத்தபொற்புரிசை

மாடுறுசீரார்வாரி சேர்கின்றவண்மையையாதெனவகுப்பா

நீடுபல்லுலகைநிரப்பியுன்னதமாய் நேமிமால்வரையதன்பாங்கர்ப்

பீடுறமன்னும் பெரும்புறக் கடல்போற்பிறங்கு பேரகழிசூழ்ந்திலகும்

186 தண்டரளங்கள்வெண்டிரைகொழிக்குந்தடங்கரைமருங்கினிலுடுத்த

மண்டியசெல்வப்பெரும்புனற் சீரார்வாரியின் வானவருலகங்

கண்டவருள்ளங்களிமிகத்தூங்கக்காண்டகு மாட்சியின்மிகுமா

லண்டர்நாடதனினண்டர்நாடடைந்ததென்பதுமற்புதமாமோ

187 பள்ளமார்பயத்தாற் பயந்தரும்பரிகப் பாங்குறுபித்திகைப்பளிக்கு

வெள்ளிவான்றகட்டின்விளங்கும் வெண்டாளம் விரிசுடர் வெண்ணிலாவெறிப்பத்

தள்ளருபெருஞ்சீர்த்தபநியப்புரிசைதன்னிறந்தான்றணந்ததனால்

வள்ளல்சேர்கயிலைமால்வரையென வே மன்னிய தென்னலாமாதோ

188 கோலமாரகழிற்குளித்திடுகுன்றக்குஞ் சரந்தனைத்திமிங்கலந்தான்

சாலும் வெம்பசிதான்றணிந்திடவிழுங்கித் தன்னகட்டடக்கிடுந்தன்மை

வேலைகளேழும்விரவியொன்றாகிமேவிடுமந்தநான்முகுந்தன்

சேலுருவாகிச்செறிந்தபல்லண்டஞ்சிறுசெலுவடக்கியபோலும்

189 தக்கசீர்க்கப்பறரங்கமாங்கரத்தாற்றண்டரளஞ்சொரிந்தளப்பத்

தொக்கபொற்புரிசைசூழ்ந்திடுஞாயில் சுற்றியபித்திகைதனக்குப்

பக்கமோடிடுநற்பாரெலாமடங்கப்பதித்திடும் பளிங்கின்மேற்பதித்த

மிக்கநல்வயிரவெண்ணிலாக்கற்றை வெண்படாம்போர்த்தது போலும்

190 அன்னபேரகழிகன்னழகொழுகு மங்கண்வானத்துயர்ந்தோங்கு

மன்னியதேரூர் மணிமறுகின்பால்வயிரவான்றூணிரைநிறுவித்

துன்னுசெம்பவளப்போதிகை தாங்குஞ்சுடர் மரகதத்துலாஞ்சேர்த்திப்

பொன்மதிலமைத்துப்புலமணியழுத்திப்பொற்புறச்சித்திரம் பொறித்து

191 தருமொளிபரப்புஞ்சந்திரகாந்தந்தரையெலாஞ்சீர்பெறச் சமைத்துப்

புகழ்பெறமிகு செம்பொன்னினால்வேய்ந்துபொற்சிகரம்பலவமைத்துத்

திகழ்பெறுகமலபீடிகைமருவுதிருமணிவாயில்கடோறு

மகிழ்தருமாடகூடமண்டபங்கண்மாளிகைசூளிகை நெருங்கும்

192 அன்னமென்னடையா ராடுமாடரங்குமணிமணிக்கோபுரநிரையு

மன்னவர்திறைகளளக்குமண்டபமும் வண்டமிழ்க்கழகமண்டபமு

முன்னையாரணங்கண்முழங்கு மண்டபமும் முரசதிருமண்டபமுந்

தன்னிகர்தருநற்றான மணட்பமுஞ் சார்ந்தபல்வீதியு நெருங்கும்

193 மந்திரமொடுநற்றந்திரம்பயிலும் வைதிகசைவநன்மடமுஞ்

சந்ததம் பயிலுஞ்சதுர்மறைமுனிவோர் சதுக்கமும் வணிகர்சந்திகளுஞ்

சிந்தையின் மகிழ்ச்சி யோங்குபல்பண்டஞ்சேர்ந்திடுங்கோலமார்தெருவு

மந்தமில்குடிகளமர்ந்து வாழ்கின்ற வாவணமெங்கர்நெருங்கும்

வேறு

194 ஆனவைதிகசைவமுமண்ணறன்

பான்மைசேர்ந்தபஞ்சாக்கரமும்பயின்

ஞானமாதவர்நற்கரத்தேந்திய

தானமுந்தவமுந்தழைத்தோங்குமால்

195 நல்லதும்புருநாரதரின்னிசை

வல்லவீணையினோசையுமைம்பலன்

வெல்லுமாதவர்வேதத்தினோசையுஞ்

சொல்லுமாதர்தந்துந்துபியோசையும்

196 வம்பறாநன்மணிமுழுவோசையும்

பம்பியேயெழும்பல்லியவோசையுஞ்

செம்பொன்மாமணித்தேரினதோசையுங்

கம்பமேவுகடாக்களிறோசையும்

197 விந்துநாதம்விளங்கியவோசையுஞ்

சந்தநான்மறைதாமுழந்கோசையு

மிந்திராதியரேத்திடுமோசையு

மந்தவார்கலியோசையடக்குமால்

198 ஓங்குபூங்கமுகும்முயர்வாழையுங்

தூங்குபைங்குலைத்தெங்குந்துருக்கமுங்

கோங்குமாரமுங்குக்குலுவும் மனந்

தாங்குசெஞ்சந்தனமுஞ் சரணமும்

199 புன்னை சம்பகம்பூதவம்பூங்கழை

மன்னுசூதமந்தாரம் வருக்கைமேற்

பன்னுகின்றபராரை மரங்களுந்

துன்னுதண்டலைசூழ்ந்திடுமெங்கர்ம்

200 பற்பகறொறும்பாங்கினிலோங்கிய

நற்பொழிறிகழ்நண்ணியபூவணன்

பொற்பதத்திற் புரந்தரன்போற்றிடுங்

கற்பகச் செழுங்காவுமணக்குமால்

201 கோடரங்கள் குயில்விளையாடலே

நீடரங்கினிலாவிளையாடுவ

மாடமேல்விளையாடுவமஞ்ஞைக

ளாடுநீர்விளையாடுவவன்னங்கள்

202 வாவிநீர்விளையாடுவர்மாதர்கள்

காவிமேல்விளையாடுங்கயற்கண்கள்

பாவின்மேல்விளையாடிடும்பண்ணெலாம்

பூவின் மேல்விளையாடுவள்பூமகள்

வேறு

203 துறுமலர்பொதுளுஞ்சீர்ச்சோலைகண்மேலெங்கு

நிறைபுனலுறுசங்கநீணிலவொளிதங்கு

மறுவறுபுகழ்மன்னும் வாவிகடொறுமேவு

மறுபதமிசைபாடுமாயிதழரவிந்தம்

204 பங்கமதறநாளும் பாயுறைவாய்நீத்தந்

தங்கியபுதுவாசச்சததளமதுமாந்திப்

பொங்களின்பண்பாடும் புண்டரிகக்கோயின்

மங்கையை நிகர்மாதர்மங்கலமிடமெங்கும்

205 பிறைநுதலதுவொக்கும் பிடிநடையதுவொக்குஞ்

சிறுகிடைதுடியொக்குந்திரண்முலைமலையொக்கும்

வெறிமுலைமுகையொக்கு மென்னகையதுநீண்ட

கறைகெழுவேலொக்குங் கண்ணிணையது மாதோ

206 முயலுறுமுதயஞ்சேர்முழுமதிமுகமொக்குங்

குயில்குழலதுவொக்குங் கோகிலமொழியொக்கு

மயிலியலதுவொக்கும் வாய்பவளமதொக்கும்

பயிலரவது வொக்கும் பரவரூமகலல்குல்

207 தங்கியதிருமால்கைச்சங்கதுகளமொக்கும்

பைங்கழையதுவொக்கும்பரவுறுபசுந்தோள்க

ளங்கைகள் செங்காந்தளம்மலரதுவொக்குஞ்

செங்கமலமதொக்குஞ் சேவடியதுதானே

வேறு

208 செல்வந்தான்விளையாடுமனைகளேசேய்கடாம்விளையாடம்மனைகளே

மல்குமம்மனைவாயினற்கோலமேமாதர்வாயின்மணக்குந்தக்கோலமே

பல்பெருங்கதைபன்னுந்தமிழ்களேபயிலிடங்களும் பன்னுந்தமிழ்களே

நல்லசெல்வங்கணாடொறுநந்துமேநல்லதல்லது நாடொறுநந்துமே

209 தலமலிந்துவிளங்குந்தடங்களே தங்குவாசந்தரும்பூந்தடங்களே

யலகில்வாசமுநிவர்மடங்களேயடைந்தவர்க்ககருளன்னமடங்களே

கொலைபுரிந்திடுங்கும்பகடங்களேகுலாவுமெங்குநிலாவுகடங்களே

முலைமுகந்தருமுத்தின்படங்களே மொழியுமும்பன்முகமும்படங்களே

வேறு

210 அங்கண்மிகவோங்குபுகழந்நகரிதன்னுட்

டுங்கநெடுமாலைநிகர்சொல்லுமிளைஞோருஞ்

செங்கமலமங்கைநிகர்திங்கர்தலாரு

மங்கலவிதத்துடன்மணத்தொழின்முடிப்பார்

211 மோகமிகுமாடமணிமுன்றின்முகமெங்கும்

பூகமொடுபூங்கதலிபொற்பினடுகிற்பார்

நாகரிகமாலிகைகணாலவணிசெய்வார்

மாகமுயர்மாமகரதோரணநிறுப்பார்

212 மேலுறவிதானமணிமேவுறவிரிப்பார்

கோலமணிமன்னுநிறைகும்பநடுவைப்பார்

மாலிலகுமட்டமணமங்கலநிரைப்பார்

பாலிகைகளெண்டிசைமுகத்திடைபதிப்பார்

213 கண்டவர்மனங்களிகொள்காமனனையாருங்

கெண்டைதனையுண்டுவளர்கேழ்கிளர்கண்ணாருங்

கொண்டசதியோடுமகிழ்கூர்ந்துகுலவிச்சேர்

பண்டருவிபஞ்சியிசைபாடிநடமேய்வார்

214 குழையிடறுகன்னியர்கள் கோலமதனன்னார்

மழையகடுகிழியவெழுமாமணிபதித்த

வெழுநிலைநன்மாடமிசையின்புறவிருந்தே

கெழுமிமிகுகின்னரநலொழுகுமிசைகேட்பார்

215 பண்களினொடின்னிசைபயிற்றியிடுகிற்பார்

மண்கணெரியச்சகடவையமதுகைப்பார்

விண்கர்றுகோபுரநல்வீதிகள் விளங்கக்

கண்களிகள்கூரவிடுகாவணநிரைப்பார்

216 திங்கர்தலிற்றிலகமும்புனைதல்செய்வார்

பொங்குதலிணங்கவணிபொற்பினணிகிற்பார்

தங்குகலவைத்தொகுதிதன்னொடுகுழைத்துக்

குங்குமசுகந்தமுலைகொண்டணிதல்செய்வார்

217 மற்றுநிகரற்றிலமுமாடமிசைமுன்றிற்

சிற்றில்களிழைத்துவிளையாடியிடுசேய்க

ளற்றதிருமாமணியனைத்தினையும்வாரிக்

குற்றமெனமுச்சிகொடுகுப்பைகள் கொழிப்பார்

218 கோதைகொடுகோலமிகுகோதையணிசெய்வார்

காதைகளளந்துசெவிகாதலினிறைப்பார்

போதுநியமஞ்செய்துபோதுகள்கழிப்பார்

மாதர்களுமைந்தர்களுமாதருடன்வாழ்வார்

219 விழைவுறுநன்மாடமதின்மிக்கிலகுதீபம்

பழகியசெல்வத்தினுயர்பரிசனநிரைப்பா

ரிழையிழைகொழுகுபுகழிட்டிடையினார்தங்

குழலின்மிகவகிலிடுகொழும்புகைநிறைப்பார்

220 மைக்கரியெனப்பிளிறுமால்களிறிணைப்பார்

தக்கதகரைப்பொருசமர்த்தொழில்விளைப்பார்

மிக்கமணிகுண்டலம்விளங்குகதிர்வீசக்

குக்குடமிசைத்துமிகுகுரவையிடுகிற்பார்

221 விஞ்சியவிண்முகடுதொடுமேருமுலைகண்டே

யஞ்சுமிடைசேர்ந்தமடவன்னநடைமின்னார்

மஞ்சரியின்வண்டுமதுவுண்டினிசைபாடக்

கொஞ்சுகிளிமழலையொடுகுயிலின்மொழிபயில்வார்

222 மருவுமணிமன்றுதொறுமன்னவர்கள் சேர்வர்

தரியலர்கள்வாயிலிடைதகுதிறையளப்ப

ரரிவையாரங்குதொறுமாடல்பயில்கிற்பார்

திருமறுகுதொறுமினியசிலதியர்கடிரிவார்

223 மங்குலைநிகர்க்குமிவர்வார்குழல்களென்பார்

வெங்கடுவிடத்தைநிகர்மேவும்விழியென்பார்

செங்கிடையையொக்குமிவர்செய்யவிதழென்பார்

பங்கயமதொக்குமிவர்பாதமலரென்பார்

224 வெய்யமணிமேவுமுலைமேருமலையென்பார்

கைகளிவையல்லதிகழ்காந்தண்மலரென்பார்

நையுமிடையன்றிமூதுநற்றுடியதென்பார்

பொய்யில்புறவடிபுதியபுத்தகமிதென்பார்

225 இன்னபரிசெங்கர்மியைந்தமுறையாலே

பொன்னகருநாணமிகுபொற்புடனிலங்குந்

துன்னுபொழில்வைகைநதிசூழ்தரவிளங்கு

மந்நகரிதன்னணியையாரறையவல்லாார்

226 சுந்தரமிகுந்திடுசுராதியர்விரும்பு

மந்தமில்சிறப்பினளகாபுரியிதென்னச்

சந்ததமுமிம்முறைதயங்குகவின்மூதூ

ரிந்திரசெல்வத்துடனியைந்திடுமெஞான்றும்

வேறு

227 பங்கமற்றமறைவழுத்துபானுகம்பனாயிரஞ்

சங்கவாயினாலுமித்தலத்துமேன்மைதானுரைத்

தங்கையாயிரத்திரட்டிகொண்டுதீட்டவமைகிலா

திங்கொார்நாவில்யான்விரித்தெடுத்தியம்பலாகுமோ

திருநகரச்சருக்க முற்றியது

ஆகச்செய்யுள் 228

*****

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

திருப்பூவணப் புராணம் Copyright © 2015 by மு​னைவர். கி. காளைராசன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book